சிறப்பு சாதனையாளர் கமல்ஹாசன்!

சி.என்.என். ஐ.பி.என். செய்தித் தொலைக்காட்சி சேனலின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சாதனையாளர் விருதைப் பெற்றார், நடிகர் கமல்ஹாசன்.

டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு இவ்விருதை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் கெளரவித்தார்.

இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி 50 ஆண்டுகாலத்தைப் பூர்த்தி செய்ததைக் கருத்தில் கொண்டு, கமல்ஹாசனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "உண்மையில் சிறப்பு சாதனையாளருக்கான தகுதியை பெற்றுள்ளேன் என்று என்னால் சொல்ல முடியாது. இதுவரை செய்தவை அனைத்தும் குறைந்ததுதான். இனி தான் மேலும் நிறைய உழைக்க வேண்டும். இந்த விருதுக்கு தேர்வு செய்த அனைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

1 comments:

பித்தனின் வாக்கு said...

கமல் இப்படி குழப்பாம அடக்கமா பேசினதுக்கே ஒரு தனி விருது தரனும். நன்றி.

Post a Comment

Followers