சம்பளம் பெறுவோருக்கு கூடுதல் வரி !

புதுடெல்லி, டிச.22-2009: சம்பளம் பெறுவோருக்கு கூடுதல் வரி விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்களது சம்பளத்துடன் பெற்று வந்த வீட்டு அலவன்சு தொகை, சொந்த மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கான வாகன செலவுகள், டிரைவர் சம்பளம், இதர போக்குவரத்து படிகள் போன்றவை வரிவருவாயில் சேர்க்கப்படாமல் இருந்தது.

மேலும், அந்த செலவுத் தொகை இதுவரை தொழில் அதிபர்களின் வருமான பட்டியலில் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் இதற்கான வரியை தொழில் அதிபர்களே செலுத்தி வந்தார்கள்.

2009-10-ம் ஆண்டு முதல் இதற்கான வரிகளை தொழில் அதிபர்கள் செலுத்த வேண்டியதில்லை என்று கடந்த பட்ஜெட்டின்போது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் சம்பளம் பெறுவோர் தங்கள் சம்பளத்துடன் பெறும் வீட்டு அலவன்ஸ் தொகை, அலுவலக மற்றும் சொந்த பயன்பாட்டுக்கான வாகன செலவுகள், கல்வி சலுகை கட்டணம், டிரைவர், தோட்ட வேலை செய்வோர் மற்றும் துப்புரவு தொழிலாளர் ஆகியோருக்கு வழங்கும் சம்பளம் ஆகியவை பணிபுரிவோரின் சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் இதற்கான கூடுதல் வரியை பணிபுரிவோரே செலுத்தவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளது.

இதனால் தொழில் நிறுவனங்களில் சம்பளம் பெறுவோர் இனி இதற்காக கூடுதல் வரியை செலுத்தவேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Followers