சிறப்பு சாதனையாளர் கமல்ஹாசன்!

சி.என்.என். ஐ.பி.என். செய்தித் தொலைக்காட்சி சேனலின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சாதனையாளர் விருதைப் பெற்றார், நடிகர் கமல்ஹாசன்.

டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு இவ்விருதை வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் கெளரவித்தார்.

இந்திய திரையுலகில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி 50 ஆண்டுகாலத்தைப் பூர்த்தி செய்ததைக் கருத்தில் கொண்டு, கமல்ஹாசனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "உண்மையில் சிறப்பு சாதனையாளருக்கான தகுதியை பெற்றுள்ளேன் என்று என்னால் சொல்ல முடியாது. இதுவரை செய்தவை அனைத்தும் குறைந்ததுதான். இனி தான் மேலும் நிறைய உழைக்க வேண்டும். இந்த விருதுக்கு தேர்வு செய்த அனைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

சம்பளம் பெறுவோருக்கு கூடுதல் வரி !

புதுடெல்லி, டிச.22-2009: சம்பளம் பெறுவோருக்கு கூடுதல் வரி விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்களது சம்பளத்துடன் பெற்று வந்த வீட்டு அலவன்சு தொகை, சொந்த மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கான வாகன செலவுகள், டிரைவர் சம்பளம், இதர போக்குவரத்து படிகள் போன்றவை வரிவருவாயில் சேர்க்கப்படாமல் இருந்தது.

மேலும், அந்த செலவுத் தொகை இதுவரை தொழில் அதிபர்களின் வருமான பட்டியலில் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் இதற்கான வரியை தொழில் அதிபர்களே செலுத்தி வந்தார்கள்.

2009-10-ம் ஆண்டு முதல் இதற்கான வரிகளை தொழில் அதிபர்கள் செலுத்த வேண்டியதில்லை என்று கடந்த பட்ஜெட்டின்போது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் சம்பளம் பெறுவோர் தங்கள் சம்பளத்துடன் பெறும் வீட்டு அலவன்ஸ் தொகை, அலுவலக மற்றும் சொந்த பயன்பாட்டுக்கான வாகன செலவுகள், கல்வி சலுகை கட்டணம், டிரைவர், தோட்ட வேலை செய்வோர் மற்றும் துப்புரவு தொழிலாளர் ஆகியோருக்கு வழங்கும் சம்பளம் ஆகியவை பணிபுரிவோரின் சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் இதற்கான கூடுதல் வரியை பணிபுரிவோரே செலுத்தவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளது.

இதனால் தொழில் நிறுவனங்களில் சம்பளம் பெறுவோர் இனி இதற்காக கூடுதல் வரியை செலுத்தவேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவுக்கு நிகரான ஆங்கிலப் படங்கள் : கமல்ஹாசன் விருப்பம்


தமிழ் சினிமாவுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்தார்.

கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை - சத்யம் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "சினிமாவில் தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற கனவுகளுடன் வரவேண்டும். பணம் சம்பாதிப்பதற்கு வேறு வியாபாரம் இருக்கிறது. எல்லா வியாபாரங்களிலும் பணம் கிடைக்கும். சில வியாபாரங்களில் மட்டுமே சந்தோஷம் கிடைக்கும். அதற்காக, தயாரிப்பாளர்களை நான் தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம்.
கடவுள்'ஆங்கில படங்களுக்கு இணையாக,' என்று சொல்வதை இனிமேல் விட்டுவிடுங்கள். சினிமாவை, ஹாலிவுட் என்றும், ஹோலிவுட் என்றும் பிரிக்காதீர்கள். சினிமா ஒன்றுதான். அதென்ன ஹாலிவுட்?

தமிழ்ப் படங்களுக்கு நிகரான ஆங்கிலப் படம் என்ற நிலை உருவாக வேண்டும். வெற்றி பெற்ற படம் மாதிரி எடுத்து கொடுங்கள் என தயாரிப்பாளர்கள் வரக் கூடாது. இயக்குநர்களை புதிதாக சிந்திக்க விடுங்கள். அப்போது தான் வித்தியாசமான காட்சிகள் கிடைக்கும். திட்டமிட்டு படம் எடுங்கள். ஒரு படத்துக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவையில்லை. அதை திரைக்கதை உருவாக்கத்துக்கு செலவிடுங்கள். ஒரு படத்துக்கு ஒரு ஆண்டே அதிகம் என்ற நிலையை ஏற்படுத்துங்கள்," என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.


செல்வ ராகவன் இயக்கியுள்ள ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரூ.32 கோடி செலவில் ரவீந்திரன் தயாரித்துள்ளார். இது, 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகாராஜாவையும், 2009-ல் வாழ்கிற ஒரு இளைஞன், இரண்டு இளம்பெண்களையும் பற்றிய கதை. இப்படம் கடந்த 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, கார்த்தி, நடிகைகள் ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

மாங்காய் சூப்

தேவையானவை: பச்சை மாங்காய் (முற்றியது) - 5, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், கிரீம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை, புதினா இலை - 10 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு, சீவிய ஐஸ் - 2 கப்.

செய்முறை: பச்சை மாங்காயை தணலில் சுட்டெடுக்கவும். ஆற வைத்து தோல் நீக்கி, சதைப் பகுதியை தனியே எடுக்கவும்.ஒரு ஜாடியில் மாங்காய், சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கிரீம், புதினா இலைகளைப் போட்டு கலக்கவும். மிருதுவாகும் வரை வேகமாக கலக்கவும். பிறகு சீவிய ஐஸை கலந்து சில்லென்று பரிமாறவும்.

விரும்பினால் வறுத்துப் பொடித்த சோம்பைத் தூவலாம். இதே முறையில் வெள்ளரி, பூசணி, சுரைக்காயிலும் செய்யலாம்.

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..

அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.

அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.

இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல்காணாமலும் போய்விட்டனர்.

உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க்காதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.

அதைப்பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட
ஊர்மக்கள் அந்தக்காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச்சென்றிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான்.

உடனே அந்தப்பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப்பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.

ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.

அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்பு மணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.

அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.

உடனே இவள் பயத்தினால் அலறினாள். அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்.

பன்றி காய்ச்சலுக்கு பழைய சோறு

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ‘ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்’ (கவனியுங்கள்: ‘மில்லியன்’ அல்ல ‘ட்ரில்லியன்’) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக…

“காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது.” என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்”.

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க ‘ஜில்’லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

இந்த வருடத்தின் சிறந்த நூறு பாடல்கள்

1 Natta Nadu A Aa E Ee
2 Hasilie Fisile Aadavan
3 Vaarayo Vaarayo Aadavan
4 Damakku Damakku Aadavan
5 Dheko Dheko Aadavan
6 Yeno Yeno Aadavan
7 Kana Kaangiren Aanantha Thaandavam
8 Kalil Aadum Aanantha Thaandavam
9 Manaatam Mayilaatam Aarumaname
10 Oh Eesa Aayirathil oruvan
11 Pachai Katre Abiyum Naanum
12 Oram Po Aintham Padai
13 Vaadi En Vasappadi Aintham Padai
14 Aval Appadi Angaadi Theru
15 Un Per Sollum Angaadi Theru
16 Mudhal Murai Athey Neram Athey Idam
17 Vennilavu Athey Neram Athey Idam
18 Honey Honey Ayyan
19 Vizhi Moodi Ayyan
20 Thoovum Poo Mazhai Ayyan
21 Nenje Nenje Ayyan
22 Pala Pala Ayyan
23 Mazhaiye Mazhaiye Eeram
24 Apple Laptop Jaggubhai
25 Anbulla Manvizhiye Jaggubhai
26 Yezhu Vannathil Jaggubhai
27 Vaa Dhinam Dhinam Jaggubhai
28 Venpanju Kanden Kadalai
29 Suthuthu Kanden Kadalai
30 Kaatru Puthithai Kanden Kadalai
31 Ododi Poren Kanden Kadalai
32 Oru Naal Iravil Kanden Kadalai
33 Allegra Kanthasamy
34 Mambo Mamiya Kanthasamy
35 Excuse me Kanthasamy
36 Bambarae Kannale Kanthasamy
37 Manasellam Kulir 100 Degree
38 Boom Kulir 100 Degree
39 Chinanjiru Kungumapoovum Kunjupuravum
40 Oru Ilavam Panju Madhurai Sambavam
41 Othakku Othathaiya Malai Malai
42 Siku Siku Boom Boom Masilamani
43 Nekka Romba nekka Masilamani
44 Oh Divya Masilamani
45 Dora Dora Masilamani
46 Odi Odi Vilaiyaadu Masilamani
47 Muthal Mazhaiye Mayaandi Kudumbathar
48 Vizhiyil Vizhiyil Mahesh Saranya Mattrum Palar
49 Om Shanthi Om Muthirai
50 Azhagaana Neeyum Muthirai
51 Uyiril Pookum Nadodigal
52 Sambo Sivasambo Nadodigal
53 Azhagaai Pookuthe Ninaithale Inikkum
54 Sexy Lady Ninaithale Inikkum
55 Banaras Pattu Ninaithale Inikkum
56 Raangi Rangamma Padikaathavan
57 Kadavulum Kaathalum Padikaathavan
58 Hey Rosu Rosu Padikaathavan
59 Aye Vetri Vela Padikaathavan
60 Oru Vetkam Varuthey Pasanga
61 Thupanki Penne Peranmai
62 Oru Kudaiyil Payanam Pugai Padam
63 Siragugal Sarvam
64 Kaatukkulle Sarvam
65 Neethane Sarvam
66 Adada Vaa Sarvam
67 Sutta Suriyana Sarvam
68 Oru Adangaapidaari Siva Manasula Shakti
69 Oru Kal Siva Manasula Shakti
70 MGR illanga Siva Manasula Shakti
71 Thithikkum Theeyai Siva Manasula Shakti
72 Eppadiyo Maatikiten Siva Manasula Shakti
73 Aathichudi TN07AL4777
74 Thiru Thiru Vizhiye Thiru Thiru Thuru Thuru
75 Jillena Veesum Thiru Thiru Thuru Thuru
76 Athiri Puthiri Thiru Thiru Thuru Thuru
77 Doctor Maapillai Thiru Thiru Thuru Thuru
78 Manjesela Manthagini Thoranai
79 Vaa Chellam Thoranai
80 Pattucha Thoranai
81 Vedi vedi Sara Vedi Thoranai
82 Pelican Paravaigal Thoranai
83 Vaanam Ellai Illai Unnai Pol Oruvan
84 Oru Devathai vaamanan
85 Yedho Seigirai Vaamanan
86 Bhoomiku vandanam Vennila Kabadi Kuzhu
87 Laesa Parakkuthu Vennila Kabadi Kuzhu
88 Uchi Mandai Vettaikaaran
89 Puli Urumuthu Vettaikaaran
90 Karigalan Vettaikaaran
91 Chinna Thamarai Vettaikaaran
92 Naan Adicha Vettaikaaran
93 Hey Rama Rama Villu
94 Jalsa Villu
95 Daddy Mummy Villu
96 Theemthanakka thillana Villu
97 Nee Kobapattal Villu
98 Vaada Maapillai Villu
99 Thigatta Thigatta Yaathumaagi
100 Sexy Mama Yaavarum Nalam

Followers